Sep 27, 2026
Thisaigal NewsYouTube
தங்காப் ஆசம் பாக்கி போராட்டம்: பட்டாசு வெடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

தங்காப் ஆசம் பாக்கி போராட்டம்: பட்டாசு வெடித்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Share:

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற 'தங்காப் ஆசம் பாக்கி' போராட்டத்தின் போது பட்டாசு வெடித்துக் கலவரத்தைத் தூண்ட முயன்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் சசாலி ஆடம், 1957 ஆம் ஆண்டு வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் போராட்டத்தைச் சீர்குலைக்க நடத்தப்பட்ட சதியா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், இதில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவத்தால் இதுவரை பொதுமக்கள் அல்லது வணிகர்களிடமிருந்து எந்தவொரு புகாரும் வரவில்லை என்றாலும், ஆதாரங்களைத் திரட்டி குற்றவாளிகளைக் கைது செய்யத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சசாலி ஆடம் விளக்கினார்.

Related News