Oct 17, 2026
Thisaigal NewsYouTube

பொதுப்பணி இலாகா தயார் நிலையில் உள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொதுப்பணி இலாகா தயார் நிலையில் உள்ளது

நவம்பர்- 11

வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்குக் பொதுப்பணி இலாகா தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Sistem eBencana JKR வாயிலாக பேரிடர் செயல்பாட்டு அறையை பொதுப்பணி இலாகா திறந்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த Sistem eBencana JKR மற்றும் பேரிடர் செயல்பாடடு அறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு, பொது மக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அதன் நலன் சார்ந்த அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக அரசாங்க ஏஜென்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு பெரும் துணையாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்ஸ்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

வெள்ளம், நிலச்சரிவு, பாலங்கள் இடிந்து விழுதல், சாலை பழுதடைத்தல் மற்றும் சேதமடைந்த, பொது பயன்பாட்டிற்குரிய தளங்களில் ஏற்படக்கூடிய இடர்கள் குறித்து தகவல் அளிக்கும் ஒருங்கிணைந்த தகவல் மையமாக Sistem eBencana JKR விளங்கும் என்று அமைச்சர் விளக்கினார்.

சாலைகள் மூடப்படுவது மற்றும் மாற்று சாலைகளை பயன்படுத்துவது போன்ற தகவல்களை மக்கள் பகிர்ந்து கொள்வதற்கு இந்த Sistem eBencana JKR முறை பொது மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று அமைச்சர் அலெக்ஸ்சண்டர் நந்தா லிங்கி விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →