ஜோகூர் பாரு, செப்டம்பர்.17-
ஜோகூர் சிகாமட்டில் அண்மையில் ஏற்பட்ட தொடர் நில நடுக்கத்தினால், அப்பகுதியைச் சேர்ந்த 62 வீடுகளில் சிறிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், அவ்வீடுகளில் வசிப்பவர்களுக்கு உதவும் வகையில், ஜோகூர் மாநில அரசு, அவர்களுக்குத் தலா 3000 ரிங்கிட் உதவித் தொகையாக வழங்க முடிவெடுத்துள்ளது.
அதே வேளையில், சேதமடைந்த அவ்வீடுகளை ஆய்வு செய்த பொதுப் பணித்துறை அதிகாரிகள், அவை தொடர்ந்து பயன்படுத்தத் தகுதியானவை தான் என உறுதியளித்திருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி அண்மையில் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், சிகாமட்டில் 9 அரசாங்கக் கட்டிடங்களும், 2 மசூதிகளும் நில நடுக்கத்தில் சேதமடைந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.








