தற்காப்புக்கலையின் போது சிறுமி ஒருவரை மானபங்கம் செய்ததாக கூறப்படும் பயிற்றுநர் ஒருவரக்கு எதிரான தடுப்புக்காவலை போலீசார் மேலும் நீட்டிக்கவிருக்கின்றனர். தனியார் கல்லூரி ஒன்றின் மாணவனான 20 வயதுடைய அந்த இளைஞரின் தடுப்புக்காவல் நாளை திங்கட்கிழமை முடிவடையவிருப்பதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த சந்தேகப்பேர்வழிக்கு எதிராக போலீசார் நான்கு குற்றப்புலனாய்வு அறிக்கைகளை திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








