Jan 21, 2026
Thisaigal NewsYouTube
மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்
தற்போதைய செய்திகள்

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.21-

மலேசிய சீனப் பள்ளி வாரியங்களின் சம்மேளனமான டோங் சோங், பள்ளிகளில் பாஹாச் மெலாயு மற்றும் வரலாறு பாடங்களை அவசியமாக்கும் நிபந்தனை குறித்து கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்குடன் பேச்சு வார்த்தை நடத்த முயன்று வருகிறது.

டோங் சோங் தலைவர் டான் யூ சிங் கூறுகையில், தேசியக் கல்வி மேம்பாட்டுத் திட்டம் 2026-2035-ன் அமலாக்கம், குறிப்பாக ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழான UEC தொடர்பாக விவாதிக்க இந்தச் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

நேற்று இந்த கல்வித் திட்டத்தை அறிவித்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், UEC தேர்வு எழுதும் மலேசிய மாணவர்கள், எஸ்பிஎம் தரத்திலான பாஹாசா மெலாயு மற்றும் வரலாறு பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கொள்கை அமல்படுத்தப்படும் என்று கூறினார்.

துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ மூலம் தொடர்பு கொண்டு, தாங்கள் விவாதித்தாகவும், இவ்விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக்கைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட்  இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

மலேசியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 615 ரிங்கிட்டைக் தாண்டியது

மலேசியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 615 ரிங்கிட்டைக் தாண்டியது