Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

Share:

பினாங்கு மாநிலம்நிபோங் திபால் பகுதியில் சமீபத்தில் தீ விபத்தில் சிக்கிய பட்டாசு கடையின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாமான் பெக்காகா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்திற்குப் பின்னர் உடனடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செபராங் பிறை நகர் மன்ற மேயர் டத்தோ பாடருல் அமின் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள பிற பட்டாசு கடைகளிலும் பாதுகாப்பு நிலைமைகளை உறுதி செய்ய ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டிருந்தாலும் கூட, தற்போது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாடருல் அமின் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு