May 21, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரத் தடை : மிகபும் அவமானமாக உள்ளது !
தற்போதைய செய்திகள்

மின்சாரத் தடை : மிகபும் அவமானமாக உள்ளது !

Share:

சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் மின்சாரத் தடை ஏற்பட்டது குறித்து திஎன்பியை விமர்சித்துள்ளார் ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காசி.

தமது முகநூல் வாயிலாக இவ்விவகாரம் குறித்து பதிவிட்ட ஒன் ஹாஃபிஸ், பராமரிப்புப் பணிகளுக்காக நேற்றிரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை திட்டமிடப்பட்ட மின்சாரத் தடை ஏற்படுவது தொடர்பான திஎன்பி இன் அறிவிப்பை பகிர்ந்திருந்தார்.

நடந்த சம்பவம் மக்களுக்குத் தொந்தரவாகவும் மாநிலத்திற்கு அவமானமாகவும் உள்ளது, திஎன்பி யும் பொதுப் பணித் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.

சுல்தான் இஸ்கண்டார் கட்டடம் மட்டும் இல்லாமல், குடிவுழைவுத் துறை, தனிமைப்படுத்தல் வளாகம், ஜோகூர் பாரு சென்ட்ரல் ஆகியவையும் பாதிக்கப்பட்டன.

சமூக ஊடகத்தில் மக்களால் பகிரப்பட்டத் தகவலின்படி, காலை 9.13 வரையிலும் மின்சாரத் தடை தொடர்ந்திருப்பதாகத் தெரிகிறது.

Related News