கோலாலம்பூர், அக்டோபர்.30-
ஓன் லைன் மோசடிகள் தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் நாடு தழுவிய நிலையில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகக் குற்றத்தடுப்பு இயக்குநர் ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
1,303 பேர், Op Mule சோதனை நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் 778 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.








