கிள்ளான், செப்டம்பர்.04-
சிலாங்கூர், கிள்ளானைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் மெக்னம் 4D ஜெக்போட்டில் கிட்டத்தட்ட 17 மில்லியன் ரிங்கிட்டை வென்றுள்ளார்.
கண்ணாடிப் பலகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த லக்கி பிக் டிக்கெட்டைத் தான் தேர்வு செய்ததன் மூலம், தனக்கு இந்த அதிர்ஷ்டம் வாய்த்திருப்பதாக அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அதிர்ஷ்டம் என்பது ஒருவருக்கு வர வேண்டிய நேரத்தில் சரியாக வந்து சேரும் என்றும், வெறும் 6 ரிங்கிட் முதலீட்டில், தம்முடைய ஆயுட்காலம் முழுமைக்கும் தேவையானப் பணத்தைச் சம்பாதித்து விட்டதாகவும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.








