கோலக் கிள்ளான், அக்டோபர்.03-
கிள்ளான், கோலக் கிள்ளான், கம்போங் தெலுக் கோங்கில் உள்ள காகிதக் கிடங்கு ஒன்று, இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்தது. மறுசுழற்சி காகிதக் கிடங்கில் ஏற்பட்ட தீ குறித்து காலை 6.47 மணிக்கு தீயணைப்பு, மீட்புப்படை அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.
11 நிமிடத்தில் சம்பவ இடத்தைச் சென்றடைந்த கோலக் கிள்ளான், பூலாவ் இண்டா, ஸ்ரீ அண்டலாஸ் மற்றும் வட கிள்ளான் ஆகிய தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 24 வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடைவில்லை என்று அவர் மேலும் கூறினார்.








