Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கடலில் மூழ்கிய முதியவர்! 3 மணி நேர தேடலுக்குப் பின் சடலமாக மீட்பு!
தற்போதைய செய்திகள்

கடலில் மூழ்கிய முதியவர்! 3 மணி நேர தேடலுக்குப் பின் சடலமாக மீட்பு!

Share:

பொந்தியான், செப்டம்பஎ.21-

ஜோகூர், பொந்தியான் கெச்சில் பகுதியில் மீன்பிடி படகின் விசிறியைச் சுத்தம் செய்து கொண்டிருந்த 65 வயது முதியவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. நேற்று நண்பகல் 12.02 மணிக்கு அவசர அழைப்பு வந்ததும், தீயணைப்பு - மீட்புப் படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையைத் தொடங்கியதாக பொந்தியான் பாரு தீயணைப்பு நிலையத்தின் மூத்த அதிகாரி மகாதீர் மாமாட் தெரிவித்தார். ஏறக்குறைய 3 மணி நேர தேடலுக்குப் பின், கடலில் மிதந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்துக் காவற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News