Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவர் விழுந்த சம்பவம்: போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவர் விழுந்த சம்பவம்: போலீசார் விசாரணை

Share:

ஷா ஆலாம், ஆகஸ்ட்.26-

சபாக் பெர்ணமில் உள்ள ஒரு பள்ளித் தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து 3 ஆம் படிவ மாணவர் ஒருவர் விழுந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார், விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது என்றார்.

2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மாணவர் பகடிவதை அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், இதற்குக் காரணமானவர்களுக்கு கூடியபட்சம் 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் மற்றும் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று டத்தோ ஷாஸெலி காஹார் குறிப்பிட்டார்.

Related News