Sep 15, 2026
Thisaigal NewsYouTube
ரோக்கியின் மரணம்: பிராணிகளுக்கு  தீங்கு செய்யும் நோக்கம் இல்லை என இளைஞர் மறுப்பு
தற்போதைய செய்திகள்

ரோக்கியின் மரணம்: பிராணிகளுக்கு தீங்கு செய்யும் நோக்கம் இல்லை என இளைஞர் மறுப்பு

Share:

கிள்ளானில் நாய் பிடிக்கும் நடவடிக்கையில் பங்கேற்ற தாம், எந்த விலங்கையும் காயப்படுத்தும் அல்லது கொல்லும் நோக்கத்துடன் அங்கு செல்லவில்லை என்று ரோக்கி என்ற நாய் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதான ஷா ஹிஸாம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற அந்த நடவடிக்கையில், கிள்ளான் மாநகர மன்றமான எம்.பீ.டீ.கே தமக்கு வழங்கிய பணியை நிறைவேற்றுவதற்காக மட்டுமே தாம் பங்கேற்றதாக அவர் கூறினார்.

ரோக்கியின் மரணம் தமக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும், ஆனால் பிராணிகளுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணம் தமக்கு இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பாளர்களின் பிரதிநிதியாகவே இந்த நடவடிக்கையில் தாம் பங்கேற்றதாகவும், இதில் கலந்து கொண்ட எம்.பீ.டீ.கே அமலாக்க அதிகாரிகள் அனைவருக்கும் நாய் பிடிக்கும் நடைமுறைகள் குறித்து விளக்கமளித்து, தேவையான உபகரணங்களை வழங்கியதாகவும் ஷா ஹிஸாம் கூறினார்.

Related News

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்