Sep 12, 2026
Thisaigal NewsYouTube
ஊழலை ஒழிக்க கைது மட்டும் போதாது! தடுப்பும் விழிப்புணர்வும் அவசியம்: எஸ்.பி.ஆர்.எம்  தலைமை ஆணையர்”
தற்போதைய செய்திகள்

ஊழலை ஒழிக்க கைது மட்டும் போதாது! தடுப்பும் விழிப்புணர்வும் அவசியம்: எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர்”

Share:

ஊழல் குற்றங்களைத் தடுப்பது என்பது குற்றம் நிகழ்ந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதுடன் முடிந்துவிடக் கூடாது என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்-ன் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான் வலியுறுத்தியுள்ளார்.

ஊழலைத் தடுப்பதில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் கல்விக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், அதன் மூலமே ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை முழுமையாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள், நடவடிக்கைகளில் உறுதியுடனும், முடிவுகளில் நியாயத்துடனும், அனைத்து சூழ்நிலைகளிலும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தனிப்பட்ட விருப்பங்கள், அழுத்தங்கள் அல்லது எந்தத் தரப்பினரின் செல்வாக்குக்கும் இடமளிக்காமல், தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சரவாக் மாநில எஸ்.பி.ஆர்.எம்-ன் செயல்பாடுகள், மக்கள் கல்வி முயற்சிகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து இன்று கூச்சிங்கில் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான்– னுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்