Aug 13, 2026
Thisaigal NewsYouTube
10 ஆண்டுகளுக்கான மலேசிய கடப்பிதழ்கள் வழக்கம்போல் வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

10 ஆண்டுகளுக்கான மலேசிய கடப்பிதழ்கள் வழக்கம்போல் வழங்கப்படும்

Share:

10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய கடப்பிதழ்கள் வழக்கம்போல் தொடர்ந்து வழங்கப்படும் என குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்கரியா ஷபான் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கான கடப்பிதழ் வழங்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், தகுதியுடைய மலேசியர்கள் வழக்கமான நடைமுறையின் அடிப்படையில் கடப்பிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடப்பிதழ் தொடர்பான நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கடப்பிதழ் விண்ணப்பம் மற்றும் புதுப்பிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு குடிநுழைவுத்துறையின் அதிகாரப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் டத்தோ ஜக்கரியா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News