Jan 22, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்
தற்போதைய செய்திகள்

வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்

Share:

கோத்தா கெமுனிங்,தாமான் ஶ்ரீ மூடா உட்பட பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று சிலாங்கூர்,கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் டி.ஏ.பி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களம் காணும் புதிய முகமான பிரகாஷ் சம்புநாதன் உறுதியளித்துள்ளார்.

ஒரு வழக்கறிஞரான பிரகாஷ், சட்டத்துறைப் பின்னணியை கொண்டிருந்த போதிலும் தம்முடைய அனுபவமானது கோத்தா கெமுனிங் தொகுதியில் மக்களின் எதிர்ப்பார்பை நிறைவு செய்யும் வகையில் சேவையாற்ற இயலும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 12 நாட்களாக கோத்தா கெமுனிங் தொகுதிற்கு உட்பட்ட தாமான் ஶ்ரீ மூடா, புக்கிட் ரிமாவ்,அலாம் மேகா, கம்போங் பரு ஹிகோம், தாமான் சாகா,புக்கிட் லன்சோங் மற்றும் இன்னும் சில இடங்களில் தாம் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்வில் பெரும்பாலோர் இப்பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்னையும், அதனால் தாங்கள் எதிர் நோக்கக்கூடிய சிரமங்களையும் தெரிவித்திருப்பதாக பிரகாஷ் சம்புநாதன் குறிப்பிட்டார்.

இன்று கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் பிரகாஷ் சம்புநாதன் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தாம் எடுக்கவிருக்கின்ற முன்னெடுப்புகளையும் விவரித்தார்.

வெள்ளப் பிரச்னைக்கு காரணமாக இருக்கக்கூடிய வடிக்கால் நீர்பாசன திட்டங்களை அரசாங்க ஏஜென்சிகள் சீர்படுத்தி வரும் வேளையில் மீண்டும் வெள்ளம் ஏற்படாமல் இருக்க சில பகுதிகளில் பம் ஹவுஸ் போன்ற எக்கியகங்களை அமைப்பதற்கு தாம் நடவடிக்கைகள் எடுக்க விருப்பதாக பிரகாஷ் சம்புநாதன் உறுதியளித்தார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்