Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பரம ஏழைகளுக்கான ரஹ்மாஹ் பங்குடைமை​த் திட்டம் அறிமுகம்
தற்போதைய செய்திகள்

பரம ஏழைகளுக்கான ரஹ்மாஹ் பங்குடைமை​த் திட்டம் அறிமுகம்

Share:

நாட்டில் உள்ள பரம ஏழைகள், வறிய நிலையிலிருந்து ​மீண்டு, தேசிய ​நீரோடையில் தங்களை இணைத்துக்கொண்டு, பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ளும் வகையில் ரஹ்மாஹ் பங்குடைமைத் திட்டங்களில் அவர்களை பங்கேற்கச் செய்யும் உத்தேசத் திட்டத்தை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சு பரி​​சீலனை செய்து வருவதாக அதன் துணை அமைச்சர் ஃபுசியா சாலெஹ் தெரிவித்துள்ளார். ரஹ்மாஹ் பங்குடைமைத்திட்டங்கள், வறிய நிலையில் உள்ளவர்கள், தாங்கள் எதிர்நோக்கி வரும் வாழ்க்சைச் செலவின சுமையைக் குறைக்கும் அதேவேளையில் அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை கொடுக்க வல்லதாகும் என்று துணை அமைச்சர் விள​க்கினார். அமானா சாஹாம் ப​​ங்குடைமைத் ​திட்டத்தின் வாயிலாக குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு வழி ஏற்படுத்தப்படும். இதன் வாயிலாக கிடைக்கக்கூடிய லாப ஈவு பணம், வறிய நிலையில் உள்ளவர்களின் ஏழ்மையை போக்குவதற்கு உதவும் என்று ஃபுசியா சாலெஹ் மேலும் விவரித்தார்.

Related News