Apr 13, 2026
Thisaigal NewsYouTube
எதிர்கட்சித் தலைவருக்கான காலியிடம் குறித்து சபாநாயகருக்கு இன்று அறிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

எதிர்கட்சித் தலைவருக்கான காலியிடம் குறித்து சபாநாயகருக்கு இன்று அறிவிக்கப்படும்

Share:

எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக இருப்பது குறித்து இன்று நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என்று பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தேவையான நடைமுறைகளின் படி, சபாநாயகருக்கு கடிதம் அனுப்புமாறு, பெரிகாத்தான் நேஷனல் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசன் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அகமது சம்சூரி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், எதிர்கட்சித் தலைவர் பதவிக்கான புதிய நியமனமானது, ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னர் நிரப்பப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related News