Jul 31, 2026
Thisaigal NewsYouTube
17 பூர்வக் குடிமக்கள் இடமாற்றம் செய்யப்படுவர்
தற்போதைய செய்திகள்

17 பூர்வக் குடிமக்கள் இடமாற்றம் செய்யப்படுவர்

Share:

கேமரன் மலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பூர்வக் குடி இணத்தைச் சேர்ந்த 17 குடும்பங்கள் அரசாங்க குவாட்டர்ஸ்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவர் என பூர்வக் குடி மக்கள் மேம்பாட்டுத் துறையான Jakoa தெரிவித்தது.

அடுத்த மாத தொடக்கத்தில் தண்ணீர். மின்சார இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பான சிக்கல்கள் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு தங்க வைக்கப்படுவார்கள் என்று Jakoa கூறியது.

நீண்ட காலத் தீர்வு நடவடிக்கையாக. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை மறு சீரமைப்பு செய்ய 3 மில்லியன் வெள்ளி தேவைப்படும் என பொதுப் பணித் துறையின் தொழில்நுட்பப் பிரிவு மேற்கொண்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அது நிறைவடைய இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் எனவும் கூறப்பட்டது.

Related News