மற்ற கட்சிகளுடன் பாஸ் கட்சி இணைந்து செயல்படுவதில் ஒரு வரன்முறை உள்ளது என பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங் தெரிவித்துள்ளார். பாஸ் கட்சி எந்த கட்சியுடன் செயல்பட்டாலும் அது இஸ்ஸாலம் கோட்பாட்டுக்கு உட்பட்டு மட்டுமே இருக்கும் என அவர் தெளிவுப்படுத்தினார். ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதும் அவர்களிடமிருந்து விலக்குவதும் இஸ்லாமிய கோட்பாட்டை எந்த அளவிற்கு அவர்கள் புரிந்து செயல்படுகின்றனர் என்று பொருத்தே அமைகின்றது என அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
இதுவரை பாஸ் கட்சி இஸ்லாமிய கோட்பாடுக்கு எதிராக செயல்பட்டதில்லை என்றும் அது இஸ்லாமியர்களின் உரிமைக்காகவும் மலாய்காரகளின் உரிமைக்காகவும் மட்டுமே போராடி வருகின்றது என அவர் மேலும் கூறினார்.
இதற்கு முன்பு மலேசிய கினி செய்தி வலைத்தளத்தில், நாட்டின் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாஸ் கட்சியுடனான நல்ல உறவு மீண்டும் வளர்க்கப்பட வேண்டும் என கூறியது ஒட்டி ஹடி அவாங் இவ்வாறான கருத்துக் கூறியிருக்க கூடும் என நம்பப்படுகின்றது.
பாஸ் கட்சி ஒன்றும் அரசியல் நாடகம் நடத்தும் இடமில்லை. அது மலாய் காரர்களின் நலனைக்காக்கும் கட்சி என்பதால் இஸ்லாம் கோட்பாடுக்கு எதிராக செயல்படுவோரோடு இணைந்து செயல்படாது என ஹடி அழுத்தமாக கூறியுள்ளார்.








