May 18, 2026
Thisaigal NewsYouTube
மூவர் உயிரிழப்புக்குக் காரணமான படகோட்டிக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

மூவர் உயிரிழப்புக்குக் காரணமான படகோட்டிக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

Share:

கோல திரங்கானு, ஜூலை.02-

கடந்த சனிக்கிழமை இரவு திரெங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து மூவர் உயிரிழந்த சம்பவத்திற்குக் காரணமானவர் என்று கூறப்படும் படகோட்டிக்கு போலீசாரின் தடுப்புக் காவல் மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது போதைப்பொருள் உட்கொண்டு இருந்ததாகக் கூறப்படும் 22 வயதுடைய அந்த படகோட்டிக்கான தடுப்புக் காவல் நாளை வியாழக்கிழமை வரை நீட்டிக்க பெசுட் மாவட்ட மாஜிஸ்திரேட் நுர்லியானா முகமட் ஸுக்ரி அனுமதி அளித்தார்.

1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் படகோட்டி தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இரவு 10.30 மணிக்கு நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தில் பினாங்கைச் சேர்ந்த 40 வயது S. ஆறுமுகம், அவரன் 3 வயது மகள் ஏ. சர்விகா மற்றும் அவர்களின் உறவுக்காரப் பிள்ளையான 10 வயது வி. வெண்பனி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களின் ஒருவரின் உடல் நிலை மிகக் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி