May 21, 2026
Thisaigal NewsYouTube
பெண் ஒருவர் கத்தி குத்தினால் கொலை
தற்போதைய செய்திகள்

பெண் ஒருவர் கத்தி குத்தினால் கொலை

Share:

பினாங்கு, ஜாலான் ராஜா உடா - வில் உள்ள ஒரு வளாகத்தின் முன் பெண் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டு உயிரிழந்தார்.

நேற்று காலை 11:10 மணியளவில் 42 வயதுடைய பெண் கழுத்திலும் முதுகிலும் ஏற்பட்ட ஆழமான கத்தி குத்தினால் செபராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

செபாராங் பெராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் அஸ்ரி ஷஃபி கூறுகையில், இச்சம்பவத்தை குறித்து சிசிடிவியில் எந்தவொரு சாட்சியும் பதிவாகவில்லை என்றும் நேரில் பார்த்த சாட்சிகள் மட்டுமே இருப்பதாக அவர் கூறினார்.

இக்கொலையை புரிந்ததாக சந்தேகிக்கும் 29 வயதுடைய ஆடவன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று பின் பாலத்திலிருந்து குதிக்க முற்பட்ட போது அவரை தடுத்து பிடிக்கப்பட்டதாக முஹ்மாட் அஸ்ரி விளக்கினார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்