Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மானபங்கம்: அந்நிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

மானபங்கம்: அந்நிய ஆடவர் கைது

Share:

சுபாங் ஜெயா, அக்டோபர்.23-

தனது உறவுக்காரரின் இரண்டு சிறார்களை மானபங்கம் படுத்தியதாகக் கூறப்படும் அந்நிய நாட்டு ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர். நேற்று புதன்கிழமை அளிக்கப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அன்றைய தினமே அந்த நபர் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

அச்சம்பவம் கடந்த 2023 ஆம் ஆண்டு சுபாங் ஜெயா, USJ 9 இல் நிகழ்ந்ததாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டது. அவ்விரு சிறார்களையும் தனது அறைக்கு அழைத்து வந்து, அந்த நபர் ஆபாசச் சேட்டை புரிந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த இரண்டு சிறார்களும், அந்த நபருக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News