நியூயார்க், செப்டம்பர்.29-
கடந்த ஜூன் மாதம் ஈரான்-இஸ்ரேல் போரினால், தற்காலிகமாக மூடப்பட்ட, ஈரானில் உள்ள மலேசியத் தூதரகம், மீண்டும் வழக்கமான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
ஈரான் நாட்டிற்கான மலேசியத் தூதர் கைரி ஓமார், மலேசியாவில் இருந்து மீண்டும் தெஹ்ரான் சென்றுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், ஈரானில் மலேசியத் தூதரகம் மூடப்பட்டதற்கான காரணம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள முகமட் ஹசான், நாம் தொலைவில் இருந்தாலும் கூட, மேற்கு ஆசியாவில் நிலையற்றத்தன்மை ஏற்பட்டால், அது மத்திய ஆசியா மட்டுமின்றி மலேசியாவையும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.








