அலோர் ஸ்டார், நவம்பர்.27-
கெடா, யான், வடக்கிழக்கே பூலாவ் பேராக்கில் சிறு கப்பல் ஒன்று மூழ்கும் அபாயத்தில் இருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார். இதர 18 பேர் காப்பாற்றப்பட்டனர் என்று பெர்லிஸ் மாநில கடல்சார் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
நேற்று காலையில் கிடைத்தத் தகவலைத் தொடர்ந்து கடற்படை ரோந்துக் கப்பலான KD Ledang மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 70 வயது உள்ளூர்வாசி மரணமுற்றார். மற்றவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, உரிய மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று பெர்லிஸ் மாநிலத்தின் மலேசிய கடல் சார் அமலாக்கத்துறையின் இயக்குநர் ரொம்லி முஸ்தஃபா தெரிவித்தார்.








