Jul 29, 2026
Thisaigal NewsYouTube
எட்டு நிமிடம் பெரும் பரிதவிப்புக்கு ஆளான ஓட்டுநர்
தற்போதைய செய்திகள்

எட்டு நிமிடம் பெரும் பரிதவிப்புக்கு ஆளான ஓட்டுநர்

Share:

கோலா லங்காட் , ஜூலை 02-

தாம் செலுத்திய Toyota Avanza வாகனம், லோரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து உருகுலைந்த வாகனத்திற்குள் சிக்கிக்கொண்ட 40 வயது நபர், சுமார் 8 நிமிடங்கள் பெரும் பரிதவிப்புக்கு ஆளானார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.50 மணியளவில் ஜாலான் பந்திங், தெலோக் பங்லிமா கராங்- கில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தெலோக் பங்லிமா கராங் - தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த அறுவர் கொண்ட வீரர்கள், பிரத்தியேக சாதனங்களைப் பயன்படுத்தி, இடிபாட்டிலிருந்து அந்த ஆடவரை மீட்டனர்.

அந்த ஆடவர் மீட்கப்படும் வரை பெரும் அவதிக்குள்ளானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் அந்த ஓட்டுநரின் இருகார்களும் நசுங்கிய இரும்புப் பிளேட்டின் மத்தியில் சிக்கிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்