Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கணக்காளரின் உடல் கண்டெடுக்கப்பட்டது

Share:

கம்போங் செராஸ் பாரு,ஜாலான் குவாரி - யில் கணக்காளரின் உடல் மீட்கப்பட்டது.
அந்நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.

நேற்று காலை 6 மணியளவில் 28 வயதுடைய ஓர் ஆடவனின் உடல் ஆடை எதுவும் இன்றி கண்டெடுக்கப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

அவ்வாடவனின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டறியப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவ பரிசோதனைக்காக அந்நபரின் உடல் துவான்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு இன்று கொண்டு செல்ல விருக்கிறது.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக சாம் ஹலிம் கூறினார்.

Related News