Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சையிட் சாடிக்கிற்கு எதிரான மேல்முறையீட்டில் டிசம்பர் 11 ஆம் தேதி விசாரணை
தற்போதைய செய்திகள்

சையிட் சாடிக்கிற்கு எதிரான மேல்முறையீட்டில் டிசம்பர் 11 ஆம் தேதி விசாரணை

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.10-

நம்பிக்கை மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம், சட்டவிரோதப் பண மாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள மூடா கட்சியின் முன்னாள் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மானின் விடுதலையை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை, கூட்டரசு நீதிமன்றத்தில் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

சையிட் சாடிக்கிற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த 7 ஆண்டு சிறைத் தண்டனை, 2 பிரம்படித் தண்டனை மற்றும் 10 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை ரத்து செய்து இருக்கும் அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

மேல்முறையீடு மீதான விசாரணை டிசம்பர் 11, 12 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் வான் ஷாஹாருடின் வான் லாடின் தெரிவித்தார்.

Related News