வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு அமைச்சு நிர்ணயித்த விதைகளை 20 கிலோவுக்கு 40 வெள்ளி என்ற விகிதத்தில் விற்பனை செய்ய மறுக்கும் அரிசி விதை மொத்த விற்பனை நிறுவனங்களின் வணிக உரிமம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
உரிமம் திரும்பப் பெறும் தகவலை அரிசி, நெல் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டுப் பிரிவு இயக்குநர் டத்தோ அஸ்மான் மஹ்மூத் இன்று புதன்கிழமை தெரிவித்ததாக. மலாக்கா மாநில கிராமப்புற வளர்ச்சி, வேளாண்மை, உணவுப் பாதுகாப்பு ஆட்சிக்குழு உறுப்பினர், டாக்டர் முகமது அக்மல் சலே குறிப்பிட்டார்.
இந்தச் செய்தி நெல் விவசாயிகள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்யும் எனத் தாம் நம்புவதாகவும் டாக்டர் முகமது அக்மல் கூறினார்.








