அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கை நாளை திங்கட்கிழமை திட்டமிட்டப்படி நடைபெறும் என்று இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த நடவடிக்கையை கைவிடும்படி சுகாதார அமைச்சு அறிவுறுத்திய போதிலும், தங்களின் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படாமல் கிடப்பில் வைத்திருக்கும் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவிசாக்கப்போவதில்லை என்று ஒப்பந்த மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
அரசுப்பணியில் நிரந்தரப் பணியாளர்களாக தங்களை மாற்றாமல், தொடர்ந்து குத்தகை அடிப்படையில் வைத்திருக்கும் சுகாதார அமைச்சின் முடிவை எதிர்த்து நாடு தழுவிய நிலையில் சுமார் எட்டாயிரம் ஒப்பந்த மருத்துவர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவிருக்கின்றனர்.
திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள அவர்கள் உறுதி பூண்டுள்ளனர். திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் மறியல் நடவடிக்கைக்குக் கருப்புத்தினம் என்று அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

தற்போதைய செய்திகள்
ஒப்பந்த மருத்துவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கை திட்டமிட்டப்படி நாளை நடைபெறும்
Related News

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு

எச் ரக வாகனப் பதிவு எண்கள் ஏலம்… 91.21 மில்லியன் ரிங்கிட் வசூல்


