Oct 13, 2026
Thisaigal NewsYouTube

மஸ்ஜிட் இந்தியா தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் காக்கப்படும்- அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மஸ்ஜிட் இந்தியா தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் காக்கப்படும்- அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், மார்ச்.20-

வரும் மார்ச் 27 ஆம் தேதி மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உடைக்கப்படாது, மாறாக அனைவருக்கு ஏதுவாக இட மாற்றம் செய்ய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்திருக்கிறார். சுமார் ஒரு மாதத்திற்கு முன் கோவில் நிர்வாகத்தினர் அப்பிரச்னை தொடர்பில் தம்மை அணுகியதாகவும் அதன் பிறகு பல முறை விவாதங்களும் சந்திப்புகளும் நடந்ததாக அவர் கூறினார்.

அவ்விவகாரத்திற்கு நியாயமாகவும், பக்தர்களைப் புண்படுத்தாத வகையிலும் அனைத்து தரப்புக்கும் இணக்கமான சுமூகத் தீர்வு காண பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரனுடன் இணைந்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் கோபிந்த் குறிப்பிட்டார். அக்கோயிலுக்கு நல்லதொரு தீர்வை ஏற்படுத்தித் தரும் முயற்சியாக அது குறித்து பல முறை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே அவ்விஷயத்தில் நல்ல தீர்வை எட்ட அனைத்து தரப்பினரும் சுமூகமான முறையில் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு வழக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

கோயிலை இட மாற்றம் செய்ய, மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே மார்ச் 27 ஆம் தேதி அக்கோயில் உடைக்கப்படாது, கோயிலை புதிய இடத்திற்கு மாற்ற, கோவில் நிர்வாகத்திற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படும் என கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஶ்ரீ டாக்டர் மைமூனா முகமட் ஷாரிப் இன்று கோயில் நிர்வாகத்திடம் நேரில் சென்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்