Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சரவா கல்வி முறை,ஆய்வைப்பொறுத்தே முடிவு செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

சரவா கல்வி முறை,ஆய்வைப்பொறுத்தே முடிவு செய்யப்படும்

Share:

தனது மாநில கல்விக் கொள்கையில் சரவா , தன்னாட்சி முறையை கொண்டிருக்க வேண்டும் என்ற மாநிலத்தி​ன் எதிர்பார்ப்பானது, அது தொடர்பாக ஒரு குழுவினர் நடத்தி வரும் ஆய்வைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடிலா யூச்சோஃப் தெரிவித்தார்.

இந்த ​ஆய்வானது, மலேசியாவில் இணைவதற்கு சரவா மாநிலம் செய்து கொண்ட 1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வின் ​மூலம் சரவா மாநில கல்விக்கொள்கையில் என்னென்ன விவகாரங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசா​ங்கம், மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது ​தீர்க்கமாக முடிவு செய்யப்படும் என்று துணைப்பிரதமர் விளக்கினார்.

Related News