Jan 21, 2026
Thisaigal NewsYouTube
பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்
தற்போதைய செய்திகள்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.21-

புக்கிட் பிந்தாங் சிட்டி சென்டரில் அமைந்துள்ள லாலாபோர்ட் (Lalaport) வணிக வளாகம், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாக அதிகாரப்பூர்வ உரிமம் பெற வாய்ப்புள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மாநகரின் மையப் பகுதிக்கே சுற்றுலாப் பயணிகளை நேரடியாக ஈர்க்கும் வகையில் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவேர் மற்றும் கோரஸ் ஹோட்டல் போன்ற சாலை ஓரங்களில் இயங்கும் பேருந்து நிலையங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்புப் பிரச்னைகளைத் தவிர்க்கவே இந்த இடமாற்றம் செய்யப்படுகிறது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

தரைப் போக்குவரத்து முகமையான APAD – டுடன் இணைந்து இந்த உரிமச் செயல்முறையை அரசாங்கம் துரிதப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைக்கு லாலாபோர்ட் மட்டுமே முழுமையான தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஒன் உத்தாமா (One Utama), புத்ராஜெயாவிலுள்ள ஐஓஐ சிட்டி மால் (IOI City Mall) மற்றும் சன்வே பிரமிட் போன்ற பிற இடங்கள் இன்னும் வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளதால், அங்கு உரிமம் பெறக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டவுடன் APAD இதற்கான உரிமங்களை வழங்கும்.

தற்போது சாலை ஓரங்களில் இயங்கி வரும் பேருந்து நிறுவனங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.

இருப்பினும், முறையான வசதிகள் கொண்ட போக்குவரத்து மையங்கள் தயாரானதும், அங்கீகரிக்கப்படாத சாலை ஓரங்களில் பேருந்துகள் நிற்க அனுமதிக்கப்படாது. டிபிஎஸ் (TBS) மற்றும் கோம்பாக் ஒருங்கிணைந்த முனையம் போன்றவை உள்நாட்டுப் பயணங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வேளையில், லலாபோர்ட் பிரத்யேகமாகச் சிங்கப்பூர் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரீமியம் மையமாகச் செயல்படும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை