சர்ச்சைக்குரிய 1எம்.டி.பி. நிதி முறைகேட்டில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மலேசிய தொழில் அதிபரான ஜோ லோ, கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்குப் பிரபல ரேப் பாடகர் பிரேஸ் மைக்கலுக்கு 2 கோடி அமெரிக்க டாலர் அல்லது எட்டரை கோடி வெள்ளியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணம் மாற்றம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆளாகியுள்ள அந்த ரேப் பாடகர், அந்த 2 கோடி அமெரிக்க டாலரை பெற்றப்பின்னர், ஜோ லோவை தமது சிறப்பு உதவியாளரைப் போல் ஆள் மாற்றாட்டம் செய்து, வாஷிங்டனில் நடந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்வில் ஒபாமாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாக பாடகர் பிரேஸ் மைக்கல் நீதிமன்றத்தில் தெரிவித்தார் என்று புலூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு


