Oct 9, 2026
Thisaigal NewsYouTube

அது வழக்கத்திற்கு மாறான சந்திப்பு அல்ல

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அது வழக்கத்திற்கு மாறான சந்திப்பு அல்ல

கோலாலம்பூர், ஜூலை.12-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தது வழக்கத்திற்கு மாறான சந்திப்பு அல்ல என்று அந்தக் கூட்டணியின் தலைமை செயலாளர் டத்தோ ஶ்ரீ ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் உள்ள அன்வாரின் அதிகாரத்துவ இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அனைத்து தரப்பினருடனும் வழக்கமாக நடத்தப்படும் சந்திப்பின் ஒரு பகுதியே தவிர வழக்கத்திற்கு மாறானது அல்ல என்று ஸம்ரி விளக்கினார்.

பாரிசான் நேஷனல் எம்.பி.க்களுடன் அன்வார் கலந்துரையாடிய விவரங்களைத் தம்மால் வெளியிட முடியாது என்றாலும் இந்தச் சந்திப்பின் போது குறிப்பிடத்தக்க பிரச்னை எதுவும் விவாதிக்கப்படவில்லை. மாறாக, பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டிய கொள்கைகள் மற்றும் விஷயங்களைப் பற்றியே அவர் பேசியதாக ஸம்ரி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →