கோலாலம்பூர், ஜூலை.19-
மலேசிய அரசப் போலீஸ் படையின் டெபுட்டி கமிஷனர் (DCP) பதவி கொண்ட ஐந்து உயர் அதிகாரிகள், கமிஷனர் (CP) பதவிக்கு உயர்த்தப்பட்டு, கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர், பினாங்கு மற்றும் கெடா ஆகிய ஐந்து முக்கிய மாநிலங்களின் புதிய மாநில போலீஸ் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் வருகின்ற 18 ஆகஸ்ட் முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகின்றது என அரசு மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ கமாருஸாமான் அப்துல்லா தெரிவித்தார்.
டத்தோ கமாருஸாமான் அப்துல்லா, வெளியிட்ட அறிவிப்பின் படி:
- ஜபாதான் பெஙுருசான் புக்கிட் அமானின் நிர்வாகப் பிரிவுத் துணை இயக்குநராக பணியாற்றிய டத்தோ டிஎஸ் அஸிஸி இல்மாயில் பினாங்கு மாநில போலீஸ் தலைவாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேலும் டத்தோ ஷாஸெலி காஹார், தற்போது சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து டத்தோ ஃபாடில் மர்சுஸ், கோலாலம்பூர் போலீஸ் தலைவாராக நியமிக்கப்பட்டுள்ளார். - டத்தோ அட்ஸி அபு ஷா கெடா மாநிலத்தில் துணை போலீஸ் தலைவர் பதவியில் இருந்தவர், இப்போது கெடா மாநில போலீஸ் தலைவராகப் பதவியேற்கிறார்
- மேலும், டெபுட்டி கமிஷனர் அப்துல் ரஹாமான் அர்சாட், ஜொகூர் மாநில போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.








