Apr 16, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் கோவில் நிலப் பிரச்சினைகள்: ஏப்ரல் 18-இல் முக்கிய ஆலோசனைக் கூட்டம்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் கோவில் நிலப் பிரச்சினைகள்: ஏப்ரல் 18-இல் முக்கிய ஆலோசனைக் கூட்டம்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள இந்து ஆலயங்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் நிலம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், ஒரு முக்கியக் கலந்துரையாடல் கூட்டம் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிரம்பான், தாமான் துவாங்கு ஜாபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மண்டபத்தில் நடைபெறும்.

மலேசிய இந்து சங்கத்தின் நெகிரி செம்பிலான் பேரவை ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் மற்றும் பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ஆலயங்களின் நிலப் பிரச்சினைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அவற்றை மாநில அரசின் நேரடி கவனத்திற்குக் கொண்டு செல்வதே இக்கூட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இதன் மூலம் சட்ட ரீதியான தீர்வுகள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் மாநிலத்தின் இந்து சமய விவகாரங்களில் மிக முக்கியமானது என்பதால், நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள அனைத்துக் கோவில் நிர்வாகிகள், நிலப் பிரச்சினை உள்ள ஆலயங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு மலேசிய இந்து சங்கத்தின் நெகிரி செம்பிலான் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

Related News