May 24, 2026
Thisaigal NewsYouTube
விசாரணைக்காக 7 நாள்களுக்குத் தடுத்துவைப்பு
தற்போதைய செய்திகள்

விசாரணைக்காக 7 நாள்களுக்குத் தடுத்துவைப்பு

Share:

சுங்கை சிப்புட்,ஆகஸ்ட் 19

10 வயது நுரைனா ஹுமைரா ரோஸ்லி என்ற சிறுமியின் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக 17 வயது ஆடவர் ஒருவர் இன்று தொடங்கி ஒரு வாரத்திற்கு தடுப்புக்காவலிடப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட அச்சிறுமியின் கழுத்து மற்றும் பிறப்பு உறுப்பு பகுதிகளில் காயங்கள் இருப்பது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்ததை அடுத்து, நேற்று அந்த ஆடவரைப் போலிஸ் கைது செய்திருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை, விளையாட சென்ற சிறுமி வீட்டிற்குத் திரும்பாததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, சனிக்கிழமை மாலை 4.20 மணிக்கு அவர் சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டார்.

Related News