Jun 8, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: ஜூன் 12-இல் தேர்தல் ஆணையம்  ஆலோசனைக் கூட்டம்
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: ஜூன் 12-இல் தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நெகிரி செம்பிலானின் 36 சட்டமன்றத் தொகுதிகளும் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹாரூன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், வேட்புமனுத் தாக்கல் மற்றும் வாக்குப்பதிவு நாளுக்கான முக்கிய தேதிகள் இறுதி செய்யப்படும். இதே கூட்டத்தில் ஜொகூர் மாநிலத் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

Related News