மலேசியக் கடப்பிதழ், 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கடப்பிதழ் தரவரிசையில் உலகின் 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு 3 ஆவது இடத்தில் இருந்த மலேசியக் கடப்பிதழ், இவ்வாண்டு ஓரிடம் முன்னேறியுள்ளது. குடிநுழைவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவரிசையின்படி, மலேசியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் 175 நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும். இதில் 129 நாடுகளுக்கு விசா தேவையில்லை. 46 நாடுகளில் சென்றடைந்ததும் விசா பெறலாம். 23 நாடுகளுக்குச் செல்ல விசா தேவைப்படுகிறது.








