Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ரத்த தானத்தைக் கோரியுள்ளது ஈப்போ மருத்துவமனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரத்த தானத்தைக் கோரியுள்ளது ஈப்போ மருத்துவமனை

ஈப்போ, ஜூன்.10-

தஞ்சோங் மாலிம் உப்சி கல்வியியல் மாணவர்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் காயமுற்ற மாணவர்களின் உயிர் காக்க ஈப்போ, ராஜ பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை ரத்த தானத்தைக் கோரியுள்ளது.

ரத்த தானம் செய்ய விரும்புகின்றவர்கள், திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், பின்னர் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ரத்த தானம் செய்யலாம் என்று அந்த மருத்துவமனை, பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12.15 மணி வரையும், பின்னர் பிற்பகல் 2.45 மணி முதல் இரவு 9 மணி வரை ரத்த தானம் வழங்கப்படுவது வரவேற்கப்படுவதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ரத்த தானம் செய்ய விரும்புகின்றவர்கள், பங்குனான் ஜபாத்தான் பெருபாதான் டிரான்ஸ்ஃபுசி, பிலிக் பெண்டெர்மாஆன் டாரா HRPB பிரிவுக்கு நேரடியாக வருகை புரியலாம் என்று அந்த மருத்துவமனை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →