துவாரான், ஜூலை.27-
சபா, துவாரான் பகுதியின் கம்போங் மெங்காபோங்கில் நேற்று மாலை ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் 24 வீடுகளும் ஒரு வாகனமும் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என துவாரான் தீயணைப்பு - மீட்புத் துறைத் தலைவர் முகமட் நோர் அமீட் தெரிவித்தார். 35 குடும்பங்களைச் சேர்ந்த 114 பேர் இந்தத் தீயால் பாதிக்கப்பட்ட நிலையில், ஶ்ரீ சுலாமான் மண்டபத்தில் தற்காலிக நிவாரண முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம், அதனால் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.








