Jun 29, 2026
Thisaigal NewsYouTube
செந்தூலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் - இந்தியாவைச் சேர்ந்த ஆடவருக்கு போலீஸ் வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

செந்தூலில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் - இந்தியாவைச் சேர்ந்த ஆடவருக்கு போலீஸ் வலை வீச்சு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

கோலாலம்பூர், ஜாலான் செந்தூலில் உள்ள வாடகை வீடு ஒன்றில், உடன் தங்கியிருந்த பெண் ஒருவரைப் பாலியல் சீண்டல் செய்த ஆடவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி, அதிகாலை நடந்த இச்சம்பவத்தின் போது, உறக்கத்தில் இருந்த 27 வயதான அப்பெண்ணை, அந்த ஆடவர் தகாத இடங்களில் தொட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த அந்த ஆடவரைப் போலீசார் தேடி வருவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் பஸ்ரி சகோனி தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 354-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனையும், பிரம்படியும் வழங்கப்படலாம்.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு