Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சொஸ்மா கைதிகளை ஜாமீனில் விடுவது பரிசீலனை
தற்போதைய செய்திகள்

சொஸ்மா கைதிகளை ஜாமீனில் விடுவது பரிசீலனை

Share:

சொஸ்மா எனப்படும் 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொஸ்மா கைதிகளுக்கு ஜாமீன் அனுமதிப்பது குறித்து தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.

சொஸ்மா சட்டத்தை வளப்படுத்துவதற்கு அந்த சட்டத்தில் செய்யப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட சில திருத்தங்களில் தடுப்புக் கைதிகளை ஜாமீனில் அனுமதிப்பதும் அடங்கும் என்று ராம் கர்ப்பால் குறிப்பிட்டார்.

நடப்பு சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள், விசாரணையின்றி ஒரு குற்பிட்ட காலத்திற்கு தடுத்து வைப்பதற்கு அனுமதி அளிக்கிறது. இந்த கொடுங்கோல் சட்டத்தை அகற்றும்படி பலத்த கோரிக்கைகள் வலுத்து வருகின்ற வேளையில் அந்த சட்டத்தை முழுமையாக அகற்றுவதற்கு அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று ராம் கர்ப்பால் விளக்கினார்.

Related News