மலாக்கா ஆளுநர் துன் அலி ருஸ்தாம் சம்பந்தப்பட்ட ஒரு பதிவிறக்கத்தை அனுப்பி வைத்தது தொடர்பாக குற்றவியல் வழக்கை எதிர்கொள்வதற்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை மலாக்கா, அலோர் காஜா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாம் ஆஜராகவிருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிர்டின் ஷாரி யின் பத்திரிகை செயலாளர் ஜேய் ஜேய் டெனிஷ் தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு சினத்தை ஏற்படுத்தும் ஓர் அறிக்கையை வெளியிட்டதற்காக குற்றவியல் சட்டம் 505 பிரிவின் கீழ் தாம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருப்பதாக போலீசார் தம்மிடம் தெரிவித்து இருப்பதாக ஜேய் ஜேய் டெனிஷ் குறிப்பிட்டார்.
தவிர 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக சட்டத்தின் கீழ் மற்றொரு குற்றச்சாட்டையும் தாம் எதிர்நோக்கக்கூடும் என்று ஜேய் ஜேய் டெனிஷ்தெரிவித்துள்ளார்.








