ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.24-
தொலைபேசி ஸ்கேம் மோசடிக் கும்பல், தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்தற்காக பினாங்கைச் சேர்ந்த 38 வயது வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தனிநபர் ஒருவருக்கு 6 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்படும் அளவிற்கு ஸ்கேம் கும்பலின் நடவடிக்கைக்கு தனது வங்கிக் கணக்கைத் தந்து உடந்தையாக இருந்ததற்காக அந்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் ஏசிபி டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த வர்த்தகர் நேற்று பிற்பகலில் செபராங் பிறையில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








