சிப்பாங், அக்டோபர்.03-
17 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர், ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சைபர்ஜெயாவில் நிகழ்ந்தது.
அந்த கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியின் எட்டாவது மாடியில் அந்த மாணவரின் உடல், ரத்த வெள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.
அந்த மாணவன், அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் மேல் தளத்தில் தங்கியிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி நோர்ஹிஸாம் குறிப்பிட்டார்.
உயிரிழந்த மாணவர், உள்ளூர் பல்லைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்ததாகத் தெரிகிறது. அவரின் இறப்பு, திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஏசிபி நோர்ஹிஸாம் மேலும் கூறினார்.








