Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!
தற்போதைய செய்திகள்

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!

Share:

சண்டாக்கான், ஏப்ரல்.19-

சண்டாக்கான், கம்போங் பஹாகியா நீர்நிலை குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் முற்றிலும் அழிந்ததால், 8,000-க்கும் மேற்பட்டக் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். குறுகலான பாதைகளாலும், பலத்த காற்றினாலும் தீ வேகமாகப் பரவிய நிலையில், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புப் படையினர் காலை 8 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக சபா மாநில தீயணைப்பு மீட்புப் படையின் சண்டாக்கான் பகுதி தலைவர் Jasri Ab Jal தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக பத்து சாப்பி மக்கள் வீடமைப்புத் திட்டம் தற்காலிக நிவாரண மையமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.

Related News