Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பண உதவி வழங்குவதற்கு சவூதி அரேபியா மன்னர் வாக்குறுதி : நஜீப் சாட்சியம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பண உதவி வழங்குவதற்கு சவூதி அரேபியா மன்னர் வாக்குறுதி : நஜீப் சாட்சியம்

கோலாலம்பூர், டிச.2-


2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பண உதவி வழங்குவதற்கு சவூதி அரேபிய மன்னர் ராஜா அப்துல்லா தமக்கு வாக்குறுதி வழங்கியிருந்ததாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் மன்னர் ராஜா அப்துல்லாவை தாம் நேரடியாக சந்தித்த போது, பொதுத் தேர்தலில் தமது தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்து தற்காத்துக்கொள்வதற்கு பண உதவி வழங்குவதாக உறுதி அளித்து இருந்தார் என்று நஜீப் குறிப்பிட்டார்.

எனினும் தமக்கு எவ்வளவுத்தொகையை நிதியாக வழங்கப் போகிறார் என்பதை அந்த சந்திப்பின் போது அவர் தெரிவிக்கவில்லை என்று நஜிப் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் சவூதி அரேபியாவில் ரியாத் வங்கி வாயிலாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், அந்தப் பணத்தை ராஜா அப்துல்லாதான் வழங்கினார் என்பதற்கு மன்னரின் பிரதிநிதி ஒருவர் கடிதம் வழங்கியிருந்ததாகவும் என்று நஜீப் குறிப்பிட்டார்.

மலேசியாவின் முதலீட்டு நிறுவனமான 1 எம்.டி.பி.யின் நிதி முறைகேட்டில் அதன் தலைவர் என்ற முறையில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் நிதி அமைச்சருமான நஜிப்பிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கில் இன்று தொடங்கிய தனது தற்காப்பு வாதத்தில் நஜீப் இவ்வாறு சாட்சியம் அளித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →