Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பள்ளிகளில் புறப்பாட நடவடிக்கைக்கு மாற்றுவழி காண்பீர்
தற்போதைய செய்திகள்

பள்ளிகளில் புறப்பாட நடவடிக்கைக்கு மாற்றுவழி காண்பீர்

Share:

காற்றின் மாசு ஆரோக்கியமற்ற அளவீட்டைப் பதிவு செய்துள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளின் புறப்பாட நடவடிக்கைகளுக்கு மாற்று வழியை ஆசிரியர்கள் கையாள வேண்டும் என தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் என்யுதிபியின் பொதுச் செயலாளர் ஃபௌசி சிஙொன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது நிலவி வரும் தூய்மைக் கேட்டால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுகாதாரம் பாதிப்பு ஏற்படும் சாத்தியக்கூறு இருப்பதால், பள்ளி நிர்வாகம் இதற்கான மாற்று வழியைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

புறப்பாட நடவடிக்கைகள் வகுப்பறைக்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. கோவிட்-19 பெருந்தொற்றின்போது அமைச்சு பல மாற்று வழிகளை நமக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறது. எனவே, அவ்வாறான முறையை நாம் இப்போது பயன்படுத்தி ஆசிரியர்களும் மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம் எனப் பரிந்துரைத்தார்.

Related News